×

நாக்பூர் வெடிமருந்து தொழிற்சாலையில் வெடிவிபத்து: 5 பெண்கள் உள்பட 6 பேர் பலி

நாக்பூர்: மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகேவுள்ள தாம்னா என்ற இடத்தில் வெடிபொருள்கள் தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தனியாருக்கு சொந்தமான இந்த வெடிமருந்து தொழிற்சாலையில் கல்குவாரிகளில் பயன்படுத்தப்படும் வெடிபொருள்கள், ரசாயன பவுடர்கள், வெடிமருந்துகள் உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த தொழிற்சாலையில் நேற்று மதியம் 1 மணியளவில் திடீரென்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறையினர் விபத்தில் பலத்த காயமடைந்த 9 பேரை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைகளில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி 5 பெண்கள் உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

The post நாக்பூர் வெடிமருந்து தொழிற்சாலையில் வெடிவிபத்து: 5 பெண்கள் உள்பட 6 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Explosives ,Nagpur ,Dhamna ,Maharashtra ,Nagpur Explosives Factory ,Dinakaran ,
× RELATED வெடிகுண்டு தயாரிப்பு: இந்தியா புதிய சாதனை