×

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தோவலுக்கு 3வது முறையாக பதவி நீட்டிப்பு

புதுடெல்லி: தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் பதவி காலத்தை 3வது முறையாக நீட்டித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. நியமனங்களுக்கான ஒன்றிய அமைச்சரவை கமிட்டி இதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளது. இந்த நியமனம் ஜூன் 10ம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வருகிறது. பிரதமரின் பதவி காலத்துக்கு இணையாக அவரது பதவி காலம் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இவரது பதவி காலம் கடந்த 5ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் தற்போது நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதே போல் பிரதமர் அலுவலக முதன்மை செயலாளர் பிரமோத் குமார் மிஸ்ராவின் பதவி காலத்தையும் நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. பிரதமர் மோடியின் ஆலோசகர்களாக ஜூன் 10 முதல் முன்னாள் அதிகாரிகள் அமித் கரே மற்றும் தருண் கபூர் ஆகியோர் மீண்டும் நியமிக்கப்பட்டுள்னர்.

 

The post தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தோவலுக்கு 3வது முறையாக பதவி நீட்டிப்பு appeared first on Dinakaran.

Tags : National Security Adviser Doval ,New Delhi ,Union Government ,National Security Adviser ,Ajit Doval ,Union Cabinet Committee on Appointments ,Dinakaran ,
× RELATED பா.ஜவுக்கு பெரும்பான்மை இல்லை; மோடி...