×

தேர்தலுக்கு பிந்தைய வன்முறை மே.வங்க ஆளுநர் மாளிகையில் பாஜ தலைவர் தடுத்து நிறுத்தம்

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் 42 மக்களவை தொகுதிகளுக்கான 7 கட்ட தேர்தல் கடந்த 1ம் தேதி நிறைவடைந்தது.  வாக்குப் பதிவு முடிவடைந்த மறுநாள்(ஜூன் 2) நாடியா மாவட்டம் காளிகஞ்ச் பகுதியில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறையில், நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்த பாஜ தொண்டர் ஒருவர் கொல்லப்பட்டார்.

இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறைகளால் பாதிக்கப்பட்ட 200 பேருடன் ஆளுநர் சி.வி.ஆனந்த போசை சந்திக்க பேரவை எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி நேற்று சென்றுள்ளார். ஆனால் ஆளுநர் மாளிகைக்கு வௌியே சிஆர்பிசியின் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி சுவேந்து அதிகாரியின் கார் ஆளுநர் மாளிகைக்கு வௌியே தடுத்து நிறுத்தப்பட்டது.

The post தேர்தலுக்கு பிந்தைய வன்முறை மே.வங்க ஆளுநர் மாளிகையில் பாஜ தலைவர் தடுத்து நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : BJP ,Bengal Governor ,House ,Kolkata ,West Bengal ,Kaliganj ,Nadia district ,
× RELATED போலி ஆவணம் தயாரித்த வழக்கு: பாஜக மண்டல் தலைவர் கைது