×

வரும் 22ல் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

புதுடெல்லி: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் வரும் 22ம் தேதி டெல்லியில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடக்கிறது என ஜிஎஸ்டி கவுன்சில் செயலகம் டிவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ளது. இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் விஷயங்கள் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

ஆனால்,கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். கடந்த ஆண்டு அக்டோபரில் ஜிஎஸ்டி கூட்டம் நடந்தது.மக்களவை தேர்தல் முடிந்த பிறகே அடுத்த கூட்டம் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. மக்களவை தேர்தல் முடிந்து கடந்த 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. தேர்தல் முடிந்த பின்னர் நடக்கும் முதலாவது கூட்டம் இதுவாகும்.

The post வரும் 22ல் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : GST Council ,New Delhi ,GST Council Secretariat ,Twitter ,GST ,Council ,Delhi ,Finance Minister ,Nirmala Sitharaman ,Dinakaran ,
× RELATED எலான் மஸ்க் கருத்தால் சமூக ஊடகங்களில்...