- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல்வர்
- சென்னை
- தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம்
- ஜனாதிபதி
- ஆர்.முனிரத்தினம்
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- பஞ்சாப்
- தமிழ்நாடு சட்டமன்றம்
- தின மலர்
சென்னை: தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் ஆர்.முனிரத்தினம், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் காலாவதியான 26 சுங்கச் சாவடிகள் உள்ளன. பஞ்சாப் மாநிலத்தை போன்று தமிழக சட்ட பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி இந்த சுங்கச் சாவடிகளை அகற்ற வேண்டும். மேலும் சென்னைக்கு அருகே உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளையும் நீக்க வேண்டும்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கட்டுமான தொழிலுக்கு ஒரு நாளைக்கு 3000 லோடு மணல் தேவைப்படுகிறது. தமிழகம் முழுவதும் 9000 லோடு மணல் தேவைப்படுகிறது. இந்த தொழிலை நம்பி சுமார் 75,000 மணல் லாரி உரிமையாளர்கள் இருக்கிறார்கள். எனவே அனைத்து மாவட்டங்களிலும் மணல் குவாரிகளை திறக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post தமிழகத்தில் காலாவதியான 26 சுங்கச் சாவடிகளை மூட வேண்டும்: லாரி உரிமையாளர்கள் முதல்வருக்கு கடிதம் appeared first on Dinakaran.