×

தேசிய ரேங்கிங் டேபிள் டென்னிஸ் சென்னை மாணவர் ஆகாஷ் சாம்பியன்

டேராடூன்: தேசிய ரேங்கிங் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரின் யு-11 சிறுவர் பிரிவில், சென்னை மாணவர் ஆகாஷ் ராஜவேலு சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். உத்தரகாண்ட் மாநில தலைநகர் டேராடூனில் நடைபெற்று வரும் இத்தொடரின் (டிச. 7-14) யு-11 சிறுவர் பிரிவு பைனலில் சக தமிழக வீரர் சத்யநாராயணனுடன் மோதிய ஆகாஷ் 11-8, 11-8, 11-9 என்ற நேர் செட்களில் வென்று கோப்பையை முத்தமிட்டார். இவர் கோட்டூர்புரம் செயின்ட் மேரிஸ் மேல்நிலைப் பள்ளியின் 6ம் வகுப்பு மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது….

The post தேசிய ரேங்கிங் டேபிள் டென்னிஸ் சென்னை மாணவர் ஆகாஷ் சாம்பியன் appeared first on Dinakaran.

Tags : National Ranking Table Tennis ,Dehradun ,National Ranking Table Tennis Championship Series ,Chennai ,Aakash Rajavelu ,Aakash ,Dinakaran ,
× RELATED கனவு ஆசிரியர்களாக தேர்வு...