×

புனித அந்தோணியார் திருத்தேர் பவனி

ஏற்காடு, ஜூன் 14: ஏற்காடு லாங்கில்பேட்டை கிராமத்தில், புனித அந்தோணியார் ஆலய தேர்பவனி கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் நவநாள் ஜெபம் நடைபெற்றது. நேற்று காலை பங்குத்தந்தை மரிய ஜோசப்ராஜ் தலைமையில், கூட்டு திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் பவனி நேற்று இரவு நடந்தது. வானவேடிக்கையுடன், ஆலயத்தில் இருந்து தொடங்கிய தேர்பவனி, பஸ் நிலையம், ஜரினாகாடு, கோவில்மேடு உள்ளிட்ட பகுதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை அடைந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

The post புனித அந்தோணியார் திருத்தேர் பவனி appeared first on Dinakaran.

Tags : Saint Anthony Thiruther Bhavani ,Yercaud ,Langilpet ,St. Anthony ,Church ,Therpavani ,Maria Josephraj ,
× RELATED கள்ளக்குறிச்சி விஷச்சாராய...