×

அரூரில் குண்டுமல்லி விலை குறைந்தது

அரூர், ஜூன் 14: அரூர் பகுதியில் கீழ்செங்கப்பாடி, குரும்பட்டி, பாரிவனம், ஆண்டியூர், வீரப்பநாய்க்கன்பட்டி, தீர்த்தமலை, பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி உள்ளிட்ட பகுதியில், அதிக அளவில் விவசாயிகள் குண்டுமல்லி சாகுபடி செய்துள்ளனர். கடந்த 4 தினங்களுக்கு முன், ஒரு கிலோ குண்டுமல்லி ₹600 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது விலை குறைந்து, கிலோ ₹300க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை விலையில் 100 கிராம் ₹40 முதல் ₹45வரை விற்பனை செய்யப்படுகிறது. விலை குறைந்ததையடுத்து மக்கள் அதிகமாக குண்டுமல்லி பூக்களை ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். இதேபோல், முல்லை பூ கிலோ ₹600க்கு விற்றது, தற்போது ₹250க்கு விற்பனையாகிறது.

The post அரூரில் குண்டுமல்லி விலை குறைந்தது appeared first on Dinakaran.

Tags : Aroor ,Arur ,
× RELATED தடுப்பணை கட்டுவது குறித்து அதிகாரிகள் ஆய்வு