×

கோயில்களில் காவலர் பணியிடங்கள் நேரடி நியமனம்

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளீதரன் சுற்றறிக்கை: தமிழ்நாடு இந்து சமய அறநிறுவனங்களின் பணியாளர்கள் விதிகள் 2020 ல் விதி எண் 9ல் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி அங்கீகரிக்கப்பட்ட பணியிட பட்டியலில் காலியாக உள்ள காவலர் பணியிடங்களை மட்டும் நேரடி நியமனம் மூலம் நிரப்பிட கோயில் நிர்வாகிகளுக்கு பொது அனுமதி வழங்கி ஆணையிடப்படுகிறது. கோயில்களில் காலியாக உள்ள காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான விளம்பர அறிவிப்பினை சட்ட விதிகளின்படி வரும் 21ம் தேதிக்குள் வெளியிட அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post கோயில்களில் காவலர் பணியிடங்கள் நேரடி நியமனம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Hindu Religious Charities Department ,Muralitharan ,Tamil Nadu ,Hindu ,
× RELATED நாகப்பட்டினம் அருகே கோயில் குளத்தில் சனீஸ்வரர் சிலை கண்டெடுப்பு