×

6 இயற்கை எரிவாயு இன்ஜின் பேருந்துகள் இயக்கம் சட்டமன்ற கூட்டத்தொடருக்கு பிறகு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் சிவசங்கர் தகவல்

சென்னை: சென்னை பல்லவன் சாலையில் உள்ள மாநகர் போக்குவரத்துக் கழக மத்திய பணிமனையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து, பணியின்போது இறந்த பணியாளர்களின் 49 வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார். மேலும் மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் 2 பேருந்துகள் மற்றும் விழுப்புரம் கோட்டத்தில் 2 பேருந்துகள், கும்பகோணம் கோட்டத்தில் 2 பேருந்துகள் என மொத்தம் 6 பேருந்துகளின் டீசல் இன்ஜினை மாற்றி, இயற்கை எரிவாயு இன்ஜின் பொருத்தப்பட்ட பேருந்துகளின் இயக்கத்தையும் அமைச்சர் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சிக்கு பின் அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது: காலாவதியான பேருந்துகள் இயக்கப்படுவதாக சிலர் குற்றம் சாட்டுகின்றனர். ஒன்றிய அரசு 15 ஆண்டுகளை கடந்தால்தான் காலாவதி என குறிப்பிட்டுள்ளது.20,000 பேருந்துகள் இயக்கப்படுகின்றன, பேருந்து என்பது ஒரு இயந்திரம். ஒரு சில நேரங்களில் பழுதாகலாம். பேருந்துகளில் ஏற்படும் பழுதுகள் குறித்து சுட்டிக்காட்டுவது தவறல்ல, ஆனால் செய்தியினை விட்டு விட்டு மீம்ஸ் போடுவதை போல செய்கிறார்கள் சில ஊடகங்கள். சட்டமன்ற கூட்டத்தொடர் முடிந்த பிறகு, போக்குவரத்து துறையில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்பப்படும். 500 எலக்ட்ரிக் பேருந்துகள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் போக்குவரத்துத் துறை செயலாளர் பணீந்திரரெட்டி, மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ், அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் மோகன், விழுப்புரம் போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் ராஜ்மோகன், மா.போ.க. இணை மேலாண் இயக்குநர் குணசேகரன், தொமுச பேரவை பொதுச்செயலாளர் சண்முகம், இந்தியன் ஆயில் நிர்வாக இயக்குநர் அண்ணாதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post 6 இயற்கை எரிவாயு இன்ஜின் பேருந்துகள் இயக்கம் சட்டமன்ற கூட்டத்தொடருக்கு பிறகு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் சிவசங்கர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister ,Sivashankar ,CHENNAI ,Sivasankar ,Municipal Transport Corporation ,Pallavan Road, Chennai ,Chennai Pallavan Road.… ,Dinakaran ,
× RELATED புதிய பயண அட்டை வழங்கும் வரை சீருடை...