×

வளி மண்டல மேலடுக்கு சுழற்சி வரும் 18 வரை மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் 18ம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் தமிழ்நாட்டிலும் மழை பெய்து வருகிறது. அத்துடன் தென்னிந்தியப் பகுதியின் மேல் கடந்த சில நாட்களாக ஒரு வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி நீடித்து வருவதன் காரணமாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. ஆவடியில் நேற்று அதிகபட்சமாக 60 மிமீ மழை பெய்துள்ளது. மணலி, சென்னை திருவிக நகர் 50 மிமீ, ராயபுரம், புழல் பெரம்பூர், திருவொற்றியூர் 40மிமீ, சோழவரம், வானகரம், மாதவரம், வில்லிவாக்கம், சென்னை ஆட்சியர் அலுவலகம், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், செங்குன்றம், கொளத்தூர், அயனாவரம், அண்ணா நகர் 30 மிமீ, கத்திவாக்கம், தாமரைப்பாக்கம், தேனாம்பேட்டை, பூண்டி, தண்டையார்பேட்டை, ஐஸ்அவுஸ், முகலிவாக்கம், கும்மிடிப்பூண்டி, திருத்தணி, கன்னியாகுமரி, ஆலங்குடி 20மிமீ, திருவாலங்காடு, அரக்கோணம், திருவூர், வால்பாறை, அம்பத்தூர், சென்னை டிஜிபி அலுவலகம், பெருஞ்சாணி, குன்றத்தூர், பொன்னேரி, அடையாறு, மீனம்பாக்கம், பூந்தமல்லி, ஆலந்தூரில் 10மிமீ மழை பெய்துள்ளது. இந்நிலையில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளதால், இன்று முதல் 18ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. சென்னை நகரின் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்புள்ளது.

The post வளி மண்டல மேலடுக்கு சுழற்சி வரும் 18 வரை மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Meteorological Center ,Chennai ,Chennai Meteorological Department ,Tamil Nadu ,South West ,Kerala ,South India ,Tropical Cyclone ,
× RELATED தமிழகத்தில் 23ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்