×

கோவையில் நடைபெறும் முப்பெரும்விழாவில் பங்கேற்க திமுக மாணவர் அணிச் செயலாளர் எழிலரசன் அழைப்பு

சென்னை: “ஜூன் 15ஆம் தேதி” மாலை 04.00 மணியளவில் கோயமுத்தூர் கொடிசியா மைதானத்தில் கழக “முப்பெரும் விழா” நடைபெற உள்ளது. கழக முப்பெரும் விழாவில் பங்கேற்க தி.மு.க. மாணவர் அணியின் அடலேறுகளே அணி திரண்டு வாரீர் என கோவையில் நடைபெறும் முப்பெரும்விழாவில் பங்கேற்க திமுக மாணவர் அணிச் செயலாளர் எழிலரசன் அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழினத் தலைவர், முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவாகவும், கழக தலைவர்
தமிழ்நாடு முதலமைச்சரின் தலைமையிலான இந்தியா கூட்டணி, தமிழ்நாட்டில் நாற்பதுக்கு நாற்பது இடங்களை வென்று பாசிச மற்றும் சர்வாதிகார சக்திகளுக்கு கடிவாளத்தைப் போட்டுள்ளது. அந்த மகத்தான வெற்றிகு ஒயாமல் உழைத்த கழக தலைவர்- தமிழ்நாடு முதலமைச்சருக்கு பாராட்டு விழாவாகவும், தமிழ்நாட்டில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் இந்தியா கூட்டணிக்கு அதிகபடியான வாக்குகளை அளித்து நம் கழகத் தலைவர் மீதான அன்பையும், பாசிசத்தின் மீதான தங்களது எதிர்ப்பையும் பதிவு செய்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாகவும் வரும் “ஜூன் 15ஆம் தேதி” மாலை 04.00 மணியளவில் கோயமுத்தூர் கொடிசியா மைதானத்தில் கழக “முப்பெரும் விழா” நடைபெற உள்ளது.

அவ்விழாவில், கழக மாணவர் அணியின் மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழக மாணவர் அணி நிர்வாகிகள், கல்லூரி மாணவர் அமைப்பின் நிர்வாகிகள், கழகத்தின் மீதும், நமது மாணவர் அணி மீதும் ஈடுபாடு கொண்ட தங்களது நண்பர்களையும் பெருந்திரளாக அழைத்துக் கொண்டு கோவையில் நடைபெறும் கழக முப்பெரும் விழாவில் பங்கேற்க தி.மு.க. மாணவர் அணியின் அடலேறுகளே அணி திரண்டு வாரீர்! வாரீர்!! என அன்போடு அழைக்கின்றேன்” என தெரிவித்துள்ளார்.

The post கோவையில் நடைபெறும் முப்பெரும்விழாவில் பங்கேற்க திமுக மாணவர் அணிச் செயலாளர் எழிலரசன் அழைப்பு appeared first on Dinakaran.

Tags : DMK Student Union ,Ehilarasan ,Coimbatore ,CHENNAI ,Kazhagam ,Triple Festival ,Coimbatore Kodisia Ground ,DMK ,student union secretary ,Dinakaran ,
× RELATED நீட் தேர்வை கண்டித்து திமுக மாணவர் அணி...