×

கல்வி, வேலை வாய்ப்பில் 3-ம் பாலினத்தவர்களை சிறப்பு பிரிவினராக கருத தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கல்வி, வேலை வாய்ப்பில் 3-ம் பாலினத்தவர்களை சிறப்பு பிரிவினராக கருத தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2017-18 ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-2 தேர்வில் கலந்துகொண்ட மூன்றாம் பாலின விண்ணப்பதாரரான அனுப்பிரி என்பவர் சான்றிதல் சரிபார்க்க தன்னை அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பவானி சுப்புராயன் 3-ம் பாலினத்தவர்களை சமுக, கல்வி ரீதியாக பின்தங்கியவர்கள் என கருதி கல்வி, வேலை வாய்பில் அனைத்து விதமான இடஒதுக்கீடு சலுகைகளையும் வழங்கவேண்டும் என ஏற்கனவே உச்சநீதிமன்றம் 2014-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால் ஒன்றிய, மாநில அரசுகள் இது தொடர்பான விதிகளை வகுக்கவில்லை என்று கூறி 3-ம் பாலினத்தவர்களை கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் ஆண்களாகவோ, பெண்களாகவோ கருதாமல் தனிப்பிரிவினராக கருத வேண்டும் என தமிழக அரசு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

3-ம் பாலினத்தவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு தொடர்பாக பிரத்தியேக விதிகளை வகுக்க வேண்டும் எனவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். எதிர்காலத்தில் மூன்றாம் பாலினத்தவர்களை ஆண்கள், பெண்கள் பிரிவில் சேர்க்க கூடாது என அறிவுறுத்திய பவானி சுப்புராயன் குரூப்-2 தேர்வில் மனுதாரரின் சான்றிதழ்களை சரிபார்க்க அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு தேர்வாணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post கல்வி, வேலை வாய்ப்பில் 3-ம் பாலினத்தவர்களை சிறப்பு பிரிவினராக கருத தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Government of Tamil Nadu ,Chennai ,Anuprii ,Tamil Nadu Government Personnel Selection Board ,Tamil Nadu government ,
× RELATED நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக...