×

சென்னை வடபழநி கோயில் முன்னாள் அறங்காவலரும், ஊழியருமான செல்வம் மறைவிற்கு முதல்வர் இரங்கல்

சென்னை: சென்னை வடபழநி கோயில் முன்னாள் அறங்காவலரும், ஊழியருமான செல்வம் மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்; “சென்னை வடபழநி ஆண்டவர் திருக்கோயில் முன்னாள் அறங்காவலரும், ஊழியருமான செல்வம் உடல்நலக்குறைவால் மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன்.

நீண்டகாலம் கோவில் திருப்பணிகளில் ஈடுபட்டு, பக்தர்கள் மத்தியில் நற்பெயரைப் பெற்ற அவரது மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பணியாளர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

The post சென்னை வடபழநி கோயில் முன்னாள் அறங்காவலரும், ஊழியருமான செல்வம் மறைவிற்கு முதல்வர் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Chennai Vadpalani Temple ,Chennai ,Chief Minister ,Wealvam Khayai K. Stalin ,Chennai North Palani Temple ,Vadpalani Temple ,
× RELATED இடைத்தேர்தல் புறக்கணிப்பு சரியல்ல...