×

திருப்பூரில் பொதுமக்களை கடித்த 8 வெறிநாய்கள்

திருப்பூர்: திருப்பூர் குமரன் சாலையில் பொதுமக்களை கடித்த 8 வெறிநாய்களை தனியார் அமைப்பினர் பிடித்துச் சென்றனர். திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் வெறி நாய்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. திருப்பூரில் கடந்த சில நாட்களாக வெறிநாய்கள் கடித்ததில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பலர் காயம் அடைந்தனர். திருப்பூர் மாநகராட்சியின் 36-வது வார்டில் குமரன் சாலையில் நேற்று வெறி நாய்கள் கடித்ததில் பேபி என்பவர் காயம் அடைந்தார்.

The post திருப்பூரில் பொதுமக்களை கடித்த 8 வெறிநாய்கள் appeared first on Dinakaran.

Tags : Tiruppur ,Tiruppur Kumaran Road ,Tiruppur Municipality ,
× RELATED காங்கேயம் அருகே வீட்டின் மேல் விழும்...