×

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கான தேர்தல் பணிக்குழு நியமனம்: திமுக தலைமை அறிவிப்பு

சென்னை: விக்கிரவாண்டி சட்டப் பேரவைத் தொகுதிக்கான தேர்தல் பணிக்குழு நியமனம் செய்து திமுக தலைமை அறிவித்துள்ளது.இதுகுறித்து திமுக தலைமை வெளியிட்ட அறிக்கை: வரும் 10ம் தேதி நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில், தலைமைக் கழகத்துடன் தொடர்பு கொண்டு ஆவன செய்திடவும், தொகுதிகளில் நடைபெற வேண்டிய பணிகளைத் தலைமைக் கழகம் சார்பில் கவனித்திடவும் தேர்தல் பணிக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

அதன்படி விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் பணிக்குழுவில், துணைப்பொதுச்செயலாளர், அமைச்சர் க.பொன்முடி, கொள்கைப் பரப்புச் செயலாளர் ஜெகத்ரட்சன் எம்.பி, ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த தொகுதியில் உள்ள காணை மத்திய ஒன்றியத்திற்கு, அமைச்சர் கே.என்.நேரு, விக்கிரவாண்டி கிழக்கு ஒன்றியத்திற்கு அமைச்சர் எ.வ.வேலு, விக்கிரவாண்டி மேற்கு ஒன்றியத்திற்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், காணை வடக்கு ஒன்றியத்திற்கு அமைச்சர் சக்கரபாணி, கோலியனூர் மேற்கு ஒன்றியத்திற்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன், விக்கிரவாண்டி மத்திய ஒன்றியத்திற்கு அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், விக்கிரவாண்டி பேரூர் பகுதிக்கு அமைச்சர் சி.வி.கணேசன், காணை தெற்கு ஒன்றியத்திற்கு, அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சட்டமன்ற உறுப்பினர் ஆர்.லட்சுமணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வரும் 14ம் தேதி மாலை, விக்கிரவாண்டியில் உள்ள ஜெயராம் திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ள தொகுதி செயல்வீரர்கள் கூட்டத்தில் மேலே குறிப்பிட்ட தேர்தல் பணிக்குழுவினர் மற்றும் கூட்டணிக் கட்சி தலைவர்கள் பங்கேற்பர்கள்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

The post விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கான தேர்தல் பணிக்குழு நியமனம்: திமுக தலைமை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Election Commission ,Vikrawandi Assembly Constituency ,DMK ,Chennai ,Election Working Committee ,Vikravandi Legislative Assembly Constituency ,Election Working Committee for the Vikravandi Legislative Assembly Constituency ,Dinakaran ,
× RELATED விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிப்பு தமிழ்நாடு அரசிதழில் வெளியீடு