×

முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 3 ஆண்டுகளாக செய்த நல்லாட்சியை மக்கள் அங்கீகரித்து வெற்றியை தந்துள்ளனர்: செல்வப்பெருந்தகை பேட்டி

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 3 ஆண்டுகளாக செய்த நல்லாட்சியை மக்கள் அங்கீகரித்து வெற்றியை தந்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார்.
விளவங்கோடு காங்கிரஸ் எம்எல்ஏ பதவியேற்பு நிகழ்ச்சிக்கு பிறகு தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக வெற்றிபெற்ற தாரகை கத்பர்ட்டுக்கு முதல்வர் தலைமையில், சட்டமன்ற தலைவர் பதவிப்பிரமாணம் செய்து வைத்திருக்கிறார்.

இந்த பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டிருக்கிறோம். இது ஒரு மகிழ்ச்சியான தருணம். ஏற்கனவே கடந்த 2021 தேர்தலில் 27 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் விஜயதரணி வெற்றிபெற்றார். ஆனால் இந்த இடைத்தேர்தலில் தாரகை கத்பர்ட் 41 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். மக்கள் பேராதரவு அளித்திருக்கிறார்கள். அங்கே பிரசாரத்தில் ஈடுபட்டு, வெற்றிபெறுவதற்கு காரணமாக இருந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த தேர்தல், தமிழ்நாட்டில் மிகப்பெரிய செய்தியை சொல்லி இருக்கிறது.

முதல்வர் கடந்த 3 ஆண்டுகளாக செய்த இந்த ஆட்சிக்கு ஒரு அச்சாரமாக மக்கள் அங்கீகரித்துள்ளார்கள். இந்தியாவில் முதல் முறையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் காலை உணவு திட்டம் கொடுத்திருக்கிறார். இதையெல்லாம் அங்கீகரிக்கும் வகையில் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வெற்றியை தமிழ்நாட்டில் கொடுத்திருக்கிறார்கள். இந்த நல்லாட்சிக்கு ஒரு அத்தாட்சியாக வெற்றி சான்றிதழை தமிழ்நாட்டு மக்கள் கொடுத்திருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

 

The post முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 3 ஆண்டுகளாக செய்த நல்லாட்சியை மக்கள் அங்கீகரித்து வெற்றியை தந்துள்ளனர்: செல்வப்பெருந்தகை பேட்டி appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M. K. Stalin ,Selvaperundhai ,Chennai ,Congress ,President ,Selvaperunthagai ,M.K.Stalin ,Tamil ,Nadu ,Selvaperunthakai ,Chennai Central Secretariat ,Congress MLA ,Vilavanko ,M.K.Stal ,
× RELATED சாதி மறுப்புத் திருமணம் தொடர்பான...