×

ராகி மாவு பழம் பொரி

தேவையான பொருட்கள்

1 கப் ராகிமாவு
2 டேபிள் ஸ்பூன் அரிசிமாவு
1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள்
1 டீஸ்பூன் நாட்டுச்சர்க்கரை
2 – கனிந்த நேந்திரம் பழம்
எண்ணெய் (பொரிப்பதற்கு).

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் ராகி மாவு, அரிசி மாவு, மஞ்சள்தூள், நாட்டுச் சர்க்கரை, ஒரு சிட்டிகை உப்பு, தண்ணீர் சேர்த்து பஜ்ஜிமாவு பதத்துக்கு கரைத்து வைத்துக்கொள்ளவும். நேந்திரம் பழத்தை தோல் எடுத்து நீளவாக்கில் கட் செய்துகொள்ளவும். ஸ்டவ்வில் வாணலி வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பழத்தை ஒவ்வொன்றாக மாவில் டிப் செய்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்தால் சுவையான ராகி மாவு பழம் பொரி தயார்!

 

The post ராகி மாவு பழம் பொரி appeared first on Dinakaran.

Tags :
× RELATED செட்டிநாடு நெஞ்செலும்பு முருங்கைக்காய் சாம்பார்