×
Saravana Stores

தினை அரிசி இனிப்புக் கஞ்சி

தேவையான பொருட்கள்

தினை அரிசி – 1 கப்
நாட்டு சர்க்கரை – 5 ஸ்பூன்
தேங்காய்த் துருவல் – 2 ஸ்பூன்
பால் – 1 கப்
நல்லெண்ணெய் – 3 ஸ்பூன்
தண்ணீர் – 4 கப்.

செய்முறை

முதலில் தினை அரிசியை சுத்தம் செய்து ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். அதன்பின், பானையில் 4 பங்கு தண்ணீர் விட்டு வேகவிட வேண்டும். பிறகு பாலைத் தனியாக காய்ச்சி வைத்துக்கொள்ள வேண்டும். பின் வேறு பாத்திரத்தில் வேக வைத்த தினை அரிசி, நாட்டுச்சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து அத்துடன் தேங்காய்த் துருவலையும் சேர்க்க வேண்டும். பின், அதில் பால் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். ஒன்று போல் சேர்ந்து வந்ததும் உடனே கீழே இறக்கிவிடுங்கள். நல்லெண்ணெய் பிடிக்கும் என்பவர்கள் தினை அரிசிக் கஞ்சியின் மேல் ஊற்றியும் சாப்பிடலாம்.

 

The post தினை அரிசி இனிப்புக் கஞ்சி appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED ஜிம் செல்பவர்கள் கவனிக்க வேண்டியவை!