×

ஈஷா சார்பில் போளுவாம்பட்டியில் கட்டப்பட்ட மின் தகன மேடையை நேரில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஈஷா சார்பில் போளுவாம்பட்டியில் கட்டப்பட்ட மின் தகன மேடையை நேரில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு ஐகோர்ட் நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், செந்தில்குமார் அமர்வு உத்தரவிட்டுள்ளது. ஈஷா அறக்கட்டளை சார்பில், போளுவாம்பட்டியில் மின் தகன மேடை அமைப்பதை எதிர்த்து சுப்பிரமணியன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். சுற்றுச்சூழல் பாதிப்பு ஏதும் இல்லை, முறையாக அனுமதி பெற்றே தகன மேடை அமைக்கப்பட்டுள்ளது என ஈஷா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஈஷா அமைத்துள்ள மின் தகனமேடை காரணமாக அருகில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளது எனவும் பொதுமக்களின் ஆட்சேபத்தை பொருட்படுத்தாமல் தகன மேடை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது எனவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஈஷா சார்பில் போளுவாம்பட்டியில் கட்டப்பட்ட மின் தகன மேடையை நேரில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Isha ,Boluvambatti ,CHENNAI ,S.S. Sundar ,Senthilkumar ,Tamil Nadu Pollution Control Board ,Boluvampatti ,Isha Foundation ,Esha ,Poluvambatti ,Dinakaran ,
× RELATED ஈஷாவில் அத்துமீறி நுழைந்த தபெதிக...