×

இலவச பயணம் அறிவிக்கப்பட்ட பஸ்சில் பெண்களிடம் வசூலித்த கட்டணம் திரும்ப ஒப்படைப்பு: கண்டக்டர் சஸ்பெண்ட்

நெல்லை: பாளை ராஜகோபாலபுரத்திலிருந்து கடந்த 10ம் தேதி நெல்லை வந்த பஸ்சில் எஸ்டிசி கல்லூரி பஸ் நிறுத்தத்தில் 2 பெண் அரசு ஊழியர்களும், 3 கல்லூரி மாணவிகளும் ஏறியபோது, அவர்களிடம் பாளை பஸ் நிலையம் செல்ல கட்டணம் தலா ரூ.7 வசூலிக்கப்பட்டது. இறங்கிய பின்னர் இலவச பஸ் என்பதை அறிந்த 5 பெண்களும், போக்குவரத்து அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தனர்.இதுகுறித்து போக்குவரத்துக் கழக அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதையடுத்து கட்டணம் செலுத்திய பெண் பயணிகள் கண்டறியப்பட்டு, போக்குவரத்து அலுவலர்கள் நேரில் சென்று வருத்தம் தெரிவித்து கட்டணத்தை திருப்பி வழங்கினர். மேலும் இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காது என்று உறுதியளித்தனர். இந்நிலையில் சம்பந்தப்பட்ட  பஸ்கண்டக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்….

The post இலவச பயணம் அறிவிக்கப்பட்ட பஸ்சில் பெண்களிடம் வசூலித்த கட்டணம் திரும்ப ஒப்படைப்பு: கண்டக்டர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Nellai ,STC College ,Palai Rajagopalapura ,
× RELATED நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில்...