×

பூந்தமல்லி அருகே வாகனத்தில் எடுத்து செல்லப்பட்ட ஒரு டன் குட்கா பொருட்கள் பறிமுதல்..!!

சென்னை: பூந்தமல்லி அருகே வாகனத்தில் எடுத்து செல்லப்பட்ட ஒரு டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வண்டலூர், மின்சூர் வெளிவட்ட சாலையில் நசரத்பேட்டை பகுதியில் பூந்தமல்லி போக்குவரத்து இன்ஸ்பெக்ட்டர் தலைமையில் தினந்தோறும் வாகன சோதனையில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில் இன்றைய தினம் வாகனசோதனையில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமாக வந்த லோடு ஆட்டோவை மடக்க முயன்றனர்.

அப்போது போலீசாரை கண்ட ஓட்டுநர் நிற்காமல் வேகமாக சென்றுள்ளார். இதனால் சந்தேகத்தின் பேரில் பின் தொடர்ந்து சென்ற போக்குவரத்து போலீசார் பூந்தமல்லி பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் விரட்டி சென்றது. அந்த வாகனமானது நசரத்பேட்டை சிக்கனலில் நின்று கொண்டிருந்த இரண்டு வாகனங்களில் மோதியபடி நின்றது. போலீசார் பின்தொடர்வதை அறிந்த டிரைவர் வாகனத்தைவிட்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். போலீசார் விரட்டி சென்று பிடிக்க முயன்றும் அந்த நபர் மின்னல் வேகத்தில் ஓடி சென்றார்.

இதனை அடுத்து வாகனத்தை திறந்து பார்த்த அதிகாரிகள் சுமார் 1டன் மதிப்பிலான குட்கா இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். நசரத்பேட்டை போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குட்கா கடத்தி வந்த வாகனத்தை பறிமுதல் செய்து குட்கா கடத்திவந்த நபர் யார்? அவர் எங்கிருந்து கொண்டு வந்தார். தப்பி சென்ற நபர் யார் என்பது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து இப்பகுதியில் போலீசார் வாகன சோதனை நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

 

The post பூந்தமல்லி அருகே வாகனத்தில் எடுத்து செல்லப்பட்ட ஒரு டன் குட்கா பொருட்கள் பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Tags : Gutka ,Poontamalli ,CHENNAI ,Traffic ,Nasaratpet ,Vandalur ,Minsur ,Dinakaran ,
× RELATED பூந்தமல்லி சுற்றுவட்டார பகுதிகளில்...