×

நெல்லை ரயில் நிலையத்தில் உள்ள 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த சரக்கு கொட்டகை கங்கை கொண்டான் ரயில் நிலையத்திற்கு மாற்றம்..!!

திருநெல்வேலி: திருநெல்வேலி ரயில் நிலையத்தில் உள்ள 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த சரக்கு கொட்டகை கங்கை கொண்டான் ரயில் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து நாள்தோறும் சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பெருநகரங்கள், திருச்செந்தூர், தென்காசி, நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு மக்கள் சென்று வருகின்றனர்.

இங்கு செயல்பட்டு வந்த சரக்கு கொட்டகை மூலம் வெளிமாநிலங்களிலிருந்து உரங்கள், அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்கள் கொண்டு வரப்பட்டு அங்கேயே அடுக்கி வைத்து பின் அருகில் உள்ள மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டு வந்தது. தற்போது அந்த ரயில் நிலையம் அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.770 கோடி செலவில் மருவடிவமைப்பு செய்யப்பட உள்ளது.

இதற்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி இருந்த நிலையில் தற்போது அங்கிருந்த சரக்கு கொட்டகை அருகில் உள்ள கங்கை கொண்டான் ரயில் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்த இந்த சரக்கு கொட்டகை இயங்கி வரும் நிலையில் இந்த திடீர் இடமாற்றம் அங்கு பணியாற்றும் தொழிலாளர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

The post நெல்லை ரயில் நிலையத்தில் உள்ள 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த சரக்கு கொட்டகை கங்கை கொண்டான் ரயில் நிலையத்திற்கு மாற்றம்..!! appeared first on Dinakaran.

Tags : Nellai railway station ,Ganga Kondan railway station ,Tirunelveli ,Tirunelveli railway station ,Tirunelveli Junction Railway Station ,Chennai ,Bengaluru ,Tiruchendur ,Tenkasi ,Nagercoil ,
× RELATED ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: வாலிபர் கைது