×

திருவாடானை அருகே சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

திருவாடானை : திருவாடானை அருகே அழகமடை கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். திருவாடானையில் இருந்து இக்கிராமத்திற்குச் செல்லும் தார்ச்சாலையானது, பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இந்நிலையில் இச்சாலை முறையாக பராமரிக்கப்படாததால், பல இடங்களில் குண்டும் குழியுமாக உள்ளது.

மேலும் மழை காலங்களில் பள்ளங்களில் குளம்போல் தண்ணீர் தேங்கி விடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

ஆகையால் சேதமடைந்த இச்சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அழகமடை கிராம மக்கள் கூறுகையில், இந்த சாலை அமைக்கப்பட்டு பல வருடங்களாகி விட்டது. அதன் பிறகு இதனை சீரமைக்காததால் 2 கிலோ மீட்டர் தூரம் வரை பல இடங்களில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகனங்களில் செல்ல சிரமம் ஏற்படுகிறது. மேலும் அவசர காலங்களில் வாடகை வாகனங்களும் வருவதில்லை. ஆகையால் இச்சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

The post திருவாடானை அருகே சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Thiruvadanai ,Alagamadai ,Thiruvadan ,Dinakaran ,
× RELATED திருவாடானை அருகே சாலையில் கவிழ்ந்த மாம்பழம் ஏற்றிய லாரி