×

பாலியல் வழக்கில் கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு சிஐடி சம்மன்

பெங்களூரு: போக்சோ வழக்கில் கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா விசாரணைக்கு இன்று ஆஜராக சிஐடி சம்மன் அனுப்பியிருந்தது. எடியூரப்பாவை கைது செய்யக் கோரி சிறுமியின் பெற்றோர் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் சிஐடி சம்மன் அனுப்பியது. டெல்லியில் உள்ள எடியூரப்பா வழக்கு விசாரணைக்காக இதுவரை சிஐடி முன் ஆஜராகவில்லை. சிஐடி சம்மன் குறித்தும் எடியூரப்பா தரப்பில் இருந்து எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. கடந்த பிப்.2-ம் தேதி சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக எடியூரப்பா மீது புகார் அளிக்கப்பட்டது. எடியூரப்பா மீது பெங்களூரு சதாசிவம் நகர் காவல் நிலையத்தில் மார்ச் 17-ம் தேதி சிறுமியின் தாயார் புகார் அளித்தார்.

The post பாலியல் வழக்கில் கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு சிஐடி சம்மன் appeared first on Dinakaran.

Tags : CID ,Summon ,Eduarapa ,Karnataka ,Bangalore ,Ediurapa ,Boxo ,iCourt ,Ediurappa ,Delhi ,Eddyurappa ,Dinakaran ,
× RELATED போக்சோ புகாரில் சிஐடி விசாரணைக்கு எடியூரப்பா நேரில் ஆஜர்