×

ரஷ்ய ராணுவத்தில் வலுக்கட்டாயமாக சேர்க்கப்படும் இந்தியர்கள்: உடனே நாடு திரும்ப அனுமதிக்க வேண்டும் என ஒன்றிய அரசு வலியுறுத்தல்!!

டெல்லி : ரஷ்ய ராணுவத்தில் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்ட 2 இந்தியர்கள் போரில் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஒன்றிய அரசு, ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ள இந்தியர்களை உடனே விடுவிக்குமாறு ரஷ்யாவை வலியுறுத்தி உள்ளது. ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே கடந்த 2.5 ஆண்டுகளாக நீடிக்கும் போரில் பல ஆயிரம் ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதையடுத்து இந்தியர்கள் உள்ளிட்ட தெற்கு ஆசிய நாட்டவர்களை ஆசை வார்த்தைக்கூறி வேலைக்காக அழைத்துச் செல்லப்பட்டு வலுக்கட்டாயமாக ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்படுவது இந்தியாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த மார்ச் மாதம் ரஷ்ய படைகள் மீது உக்ரைன் நடத்திய தாக்குதலில் பல இந்தியர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், மேலும் 2 இந்தியர்கள் கொல்லப்பட்டு இருப்பது இந்திய அரசை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்தியர்களை ராணுவத்தில் சேர்க்கக்கூடாது என்று ரஷ்ய தூதரிடம் கண்டிப்புடன் கூறியுள்ள வெளியுறவுத் துறை அமைச்சகம், இது போன்ற செயல்பாடுகள் இரு நாட்டு உறவை சீர்குலைக்கும் என்றும் கண்டித்துள்ளது. ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட இந்தியர்களை உடனே நாடு திரும்ப அனுமதிக்க வேண்டும் என்றும் வெளியுறவுத் துறை அமைச்சகம் வலியுறுத்தி உள்ளது. அத்துடன் ரஷ்யாவுக்கு செல்லும் இந்தியர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளது. யூடியூப் வீடியோக்கள் மூலம் மூளைச் சலவை செய்யப்பட்டு ரஷ்யாவுக்கு அழைத்துச் செல்லப்படும் இந்தியர்கள் போர் பயிற்சி அளிக்கப்பட்டு, போர் களத்தில் நிறுத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The post ரஷ்ய ராணுவத்தில் வலுக்கட்டாயமாக சேர்க்கப்படும் இந்தியர்கள்: உடனே நாடு திரும்ப அனுமதிக்க வேண்டும் என ஒன்றிய அரசு வலியுறுத்தல்!! appeared first on Dinakaran.

Tags : India ,Army ,EU Government ,Delhi ,Indians ,Russian army ,Russia ,Ukraine ,
× RELATED மாணவர்களின் மருத்துவ கல்வி கனவு...