×

தமிழ்நாட்டின் 4 மாவட்ட கடற்கரைகளுக்கான கள்ளக்கடல் நிகழ்வு நாளை இரவு 11.30 மணி வரை நீட்டிப்பு

சென்னை: தமிழ்நாட்டின் 4 மாவட்ட கடற்கரைகளுக்கான கள்ளக்கடல் நிகழ்வு நாளை இரவு 11.30 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்திலும் லேசான கடல் எழுச்சி இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குமரி, நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களின் கள்ளக்கடல் எச்சரிக்கை நாளை இரவு வரை தொடரும் எனவும் 4 மாவட்டங்களில் கடலோர பகுதிகளில் கடல் அலை அதிக உயரம் எழும்பும் வாய்ப்பு உள்ளது எனவும் இந்திய கடல்சார் தகவல் மையம் எச்சரித்துள்ளது. குமரியில் 2.5 மீ., ராமநாதபுரத்தில் 2.8 மீ., நெல்லை, தூத்துக்குடியில் 2.6 மீ. உயரம் வரை கடல் அலை எழும்பக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டின் 4 மாவட்ட கடற்கரைகளுக்கான கள்ளக்கடல் நிகழ்வு நாளை இரவு 11.30 மணி வரை நீட்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Black Sea ,district beaches ,Tamil Nadu ,Chennai ,beaches ,Thiruvallur ,Kanchipuram ,Kumari ,Nella ,Ramanathapuram ,Tuthukudi Districts ,Black Sea Event for Tamil Nadu ,4 District Beaches ,
× RELATED பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவையும்,...