×

ஒடிசா, ஆந்திரா மாநில முதலமைச்சர்கள் இன்று பதவியேற்பு

ஆந்திர முதலமைச்சராக தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு இன்று பதவியேற்கிறார். காலை 11.27 மணிக்கு ஆந்திர முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பதவியேற்க உள்ளார். சந்திரபாபு நாயுடுவுக்கு ஆளுநர் அப்துல் நசீர் பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார். கிருஷ்ணா மாவட்டம் கன்னவரம் விமான நிலையம் அருகே உள்ள கேசரப்பள்ளி ஐடி பூங்கா மைதானத்தில் பதவி ஏற்பு விழா நடைபெறுகிறது. சந்திரபாபு நாயுடு பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி மற்றும் பல்வேறு மாநில முதல்வர்கள் பங்கேற்க உள்ளனர்.

அதேபோல ஒடிசா மாநில முதலமைச்சராக மோகன் மஜி இன்று பதவியேற்க உள்ளார். புவனேஸ்வரில் மாலை 5 மணிக்கு நடைபெறும் பதவியேற்பு விழாவில் பிரதமர் பங்கேற்கிறார். பதவியேற்பு விழாவில் பாஜக ஆளும் மாநில முதலமைச்சர்கள், அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். ஒடிசா மாநிலத்தில் முதல்முறையாக பாஜக ஆட்சி அமைக்க உள்ளது.

The post ஒடிசா, ஆந்திரா மாநில முதலமைச்சர்கள் இன்று பதவியேற்பு appeared first on Dinakaran.

Tags : Chief Ministers ,Odisha ,Andhra ,Telugu Desam Party ,Chandrababu Naidu ,Andhra Pradesh ,Chief Minister ,Governor Abdul Naseer ,Krishna District ,
× RELATED சென்னை: கஞ்சா கடத்திய இருவர் கைது