×

அக்கரை – மாமல்லபுரம் சாலை சுங்கக் கட்டணம் நள்ளிரவு உயர்வு

சென்னை: கிழக்கு கடற்கரை சாலையில் அக்கரை மாமல்லபுரம் இடையே உள்ள சாலைக்கான சுங்கக் கட்டணம் நள்ளிரவு முதல் உயர்த்தப்பட்டுள்ளது. கார், ஜீப், 3 சக்கர வாகனங்களுக்கு ரூ.1 முதல் ரூ.68 வரை கட்டண உயர்ந்துள்ளது. இலகு ரக வணிக மற்றும் சரக்கு வாகனங்களுக்கு ரூ.2 முதல் ரூ.110 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. உள்ளூர் வணிகத்துக்கு பயன்படுத்தப்படும் சரக்கு ஆட்டோ, டாக்சி, மேக்சி கேப், 3 சக்கர வாகனங்களுக்கான மாதாந்திர கட்டணம் ரூ.245-ஆக உயர்ந்துள்ளது. இலகு ரக வணிக வாகனம், ஜே.சி.பி., கிரேன் உள்ளிட்ட வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் ரூ.310-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

The post அக்கரை – மாமல்லபுரம் சாலை சுங்கக் கட்டணம் நள்ளிரவு உயர்வு appeared first on Dinakaran.

Tags : Akkarai ,Mamallapuram ,CHENNAI ,East Coast Road ,Dinakaran ,
× RELATED புராதன சின்னங்களை சுற்றி பார்க்க...