×

ஜம்முவில் 3வது முறையாக தீவிரவாதிகள் தாக்குதல்!

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் உள்ள ராணுவ முகாமை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒருவர் காயம் அடைந்தார். பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டதால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. ஜம்மு காஷ்மீரின் ரீசி மற்றும் கத்வாவில் ஏற்கனவே தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய நிலையில், 3வதாக தோடாவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

The post ஜம்முவில் 3வது முறையாக தீவிரவாதிகள் தாக்குதல்! appeared first on Dinakaran.

Tags : Jammu ,Srinagar ,Doda district ,Jammu and ,Kashmir ,attack ,Dinakaran ,
× RELATED நிலச்சரிவு: பூஞ்ச் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது..!!