×

ஒட்டன்சத்திரம் சந்தையில் காய்கறிகள் விலை கிடுகிடு உயர்வு: இல்லத்தரசிகள் கவலை

திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் சந்தையில் காய்கறிகள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த வாரம் 37 ரூபாய்க்கு விற்ற முருங்கை 45 ரூபாய்க்கும், 120 ரூபாய்க்கு விற்ற அவரைக்காய் 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ரூ.80-க்கு விற்ற உருண்டை பச்சை மிளகாய் ரூ.125-க்கும் ரூ.500-க்கு விற்ற 14 கிலோ கொண்ட ஒரு தக்காளி பெட்டி ரூ.900-க்கும் விற்பனையாகிறது. ரூ.35-க்கு விற்ற வெண்டைக்காய் ரூ.17-க்கும் ரூ.24-க்கு விற்ற பீட்ரூட் ரூ.17-க்கும் ரூ.16-க்கு விற்ற சுரைக்காய் ரூ.9-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

17 ரூபாய்க்கு விற்ற பச்சைப்பயிர் 47 ரூபாய்க்கும் 40 ரூபாய்க்கு விற்ற சவ்சவ் 45 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 20 ரூபாய்க்கு விற்ற மாங்காய் 25 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெண்டைக்காய், பீட்ரூட், சுரைக்காய் ஆகியவற்றின் விலை மட்டும் குறைந்துள்ளது. வெயிலின் தாக்கம் மற்றும் கோடை மழையின் காரணமாக காய்கறிகளின் வரத்து முற்றிலும் குறைந்துவிட்டது. சுப நிகழ்ச்சிகள் மற்றும் திருவிழாக்கள் அதிகளவில் நடைபெறுவதால் காய்கறிகளின் தேவை அதிகரித்துள்ளது.

ஒட்டன்சத்திரம் சந்தையில் காய்கறிகள் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்வதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர்.

The post ஒட்டன்சத்திரம் சந்தையில் காய்கறிகள் விலை கிடுகிடு உயர்வு: இல்லத்தரசிகள் கவலை appeared first on Dinakaran.

Tags : Ottanasram ,Dinakaran ,
× RELATED சிறுவர்களை தொடர்ந்து போதை மாத்திரைக்கு அடிமையாகும் சிறுமிகள்