×

வேதாரண்யம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி

 

வேதாரண்யம்,ஜூன் 12: வேதாரண்யம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி துவங்கியது. 9 நாட்கள் நடைபெறும் ஜமாபந்தியில் முதல் நாள் நேற்று மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராமன் தலைமையில் நடைபெற்றது. வேதாரண்யம் தாசில்தார் திலகா, மாவட்ட வட்ட வழங்க அலுவலர் பழனிவேல், மாவட்ட கலெக்டரின் அலுவலக மேலாளர் அன்சாரி கலந்து கொண்டனர். நேற்று காடன்தேத்தி, திருமாளம், தலைஞாயிறு, முதல்சேத்தி, தலைஞாயிறு, இரண்டாம்சேத்தி ஆகிய கிராமங்களில் இருந்து பட்டா, முதியோர் உதவித்தொகை, மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட 69 மனுக்கள் பெறப்பட்டுள்ளது என தாசில்தார் திலகா தெரிவித்தார்.

The post வேதாரண்யம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி appeared first on Dinakaran.

Tags : Jamabandhi ,Vedaranyam Taluk Office ,Vedaranyam ,taluk ,Assistant District Collector ,General) ,Raman ,tehsildar ,jamabandi ,Dinakaran ,
× RELATED காஞ்சிபுரம் ஜமாபந்தி நிறைவு நாளில் 133...