×

தாந்தோணிமலை ஒன்றிய அலுவலக வளாகத்தில் மழைநீர் சேகரிப்பு தொட்டி புதுப்பித்து தர வேண்டும்

 

கரூர், ஜூன் 12: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை ஒன்றிய அலுவலக வளாகத்தில் பழுதடைந்த நிலையில் உள்ள மழை நீர் சேகரிப்பு தொட்டியை புதுப்பித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை ஒன்றிய அலுவலக வளாகத்தில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தது. போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தினால் கடந்த சில ஆண்டுகளாக பயனற்ற நிலையில் இந்த தொட்டி வளாகம் உள்ளது.

சில ஆண்டுகளுககு முன்பு இந்த மழைநீர் சேகரிப்பு தொட்டி முக்கிய நிகழ்வாக கருதப்பட்டு அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் குடியிருப்புகளில் வைக்கப்பட்டது. மழைநீரை சேமிக்கும் வகையில் இந்த திட்டம் அப்போது கொண்டு வரப்பட்டது. தற்போதைய நிலையில், ஒன்றிய அலுவலகத்தில் பயனற்ற நிலையில் இந்த மழைநீர் சேகரிப்பு தொட்டி பயனற்ற நிலையில் உள்ளது.

தென்மேற்கு பருவமழை காலம் துவங்கியுள்ள நிலையில், மழைநீரை சேமித்து வைக்கும் வகையில் இந்த தொட்டி வளாகத்தை புதுப்பிக்க வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விசயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி மழைநீர் சேகரிப்பு தொட்டியை புதுப்பித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் கோரிக்கை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post தாந்தோணிமலை ஒன்றிய அலுவலக வளாகத்தில் மழைநீர் சேகரிப்பு தொட்டி புதுப்பித்து தர வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Thanthonimalai union ,Karur ,Dandonimalai Union ,Karur Corporation ,Dandonimalai Union Office Complex ,Dinakaran ,
× RELATED கரூர் அருங்காட்சியகத்தில் கல்வி...