×

லட்சுமி நாராயண பெருமாள் அவதார உற்சவம் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யாறு அருகே மேல்பாக்கம் கிராமத்தில்

செய்யாறு, ஜூன் 12: செய்யாறு அருகே மேல்பாக்கம் கிராமத்தில் லஷ்மி நாராயண பெருமாள் அவதார உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். செய்யாறு அடுத்த உத்திரமேரூர் வட்டம், பெருநகர் அடுத்த மேல்பாக்கம் கிராமத்தில்  லஷ்மி நாராயண பெருமாள் கோயிலில் வைகாசி புஷ்யம் அவதார உற்சவம் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சியையொட்டி பல்வேறு விஷேச திரவியங்கள் கொண்டு விசேஷ அலங்கார திருமஞ்சனமும் புதிய வஸ்திரம் சாற்றி, பல்வேறு மலர் மாலைகள் சாற்றி, அலங்காரம் செய்து அர்ச்சனை நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு லஷ்மி நாராயண பெருமாளை தரிசித்து சென்றனர்.

The post லட்சுமி நாராயண பெருமாள் அவதார உற்சவம் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யாறு அருகே மேல்பாக்கம் கிராமத்தில் appeared first on Dinakaran.

Tags : Lakshmi Narayana Perumal Avatar Utsavam ,Swami ,Melpakkam village ,Seyyar ,Lashmi Narayana Perumal Avatar Utsavam ,Lakshmi Narayana ,Uttaramerur ,Perunagar ,Seiyaru ,
× RELATED சென்னை திருவான்மியூர் பாம்பன் சுவாமி...