×

தீர்த்தக்குட ஊர்வலம்

ஆட்டையாம்பட்டி, ஜூன் 12: வீரபாண்டி பகுதியில் பத்ரகாளி அம்மன், செல்வகணபதி, கருப்பனார் மற்றும் பரிவார தெய்வங்கள் அமைந்துள்ள கோயிலில் இன்று கும்பாபிஷேகம் நடக்கிறது. இதனை முன்னிட்டு நேற்று காலை விக்னேஸ்வர பூஜை, கும்ப அலங்காரத்துடன் யாக சாலை பிரவேசம் நடைபெற்றது. தொடர்ந்து முளைப்பாரி மற்றும் தீர்த்தக்குட ஊர்வலம் நடைபெற்றது. முக்கிய சாலைகள் வழியாக வலம் வந்து கோயிலை அடைந்தது. இன்று காலை பத்ரகாளி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

The post தீர்த்தக்குட ஊர்வலம் appeared first on Dinakaran.

Tags : Thirtakuda Procession ,Attaiyambatti ,Kumbabhishekam ,Bhadrakali Amman ,Selvaganapati ,Karuppanar ,Parivar ,Veerapandi ,Vigneswara Puja ,Yaga road ,Kumba ,Theerthakuda Procession ,
× RELATED ₹5.12 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்