×

விபத்தில் தொழிலாளி பலி

 

திருப்பூர், ஜூன் 12: திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டி எம்.ஜி.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாமலை (43). தையல் தொழிலாளி. இவர் சம்பவத்தன்று இரவு திருப்பூரில் இருந்து அவினாசி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அம்மாபாளையம் தாண்டி சென்ற போது ஒரு பெண் திடீரென சாலையை கடக்க முயன்றுள்ளார். இதில் நிலை தடுமாறிய அண்ணாமலை, அந்த பெண் மீது மோதாமல் இருப்பதற்காக மோட்டார் சைக்கிளை வலது புறமாக திருப்பி உள்ளார்.

இதையடுத்து அண்ணாமலை சாலையின் மையப்பகுதியில் இருந்த தடுப்புச்சுவர் மீது மோதி கீழே விழுந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அண்ணாமலை மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் அவர் படுகாயமடைந்து, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திருமுருகன்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post விபத்தில் தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Annamalai ,Thirumuruganpoondi MGR Nagar ,Avinasi ,Ammapalayam ,
× RELATED திருப்பூர் தெற்கு தொகுதியில் அரசு...