×

பெற்றோருக்கு தெரியாமல் இரவில் கார் ஓட்டி பழகிய 2 சிறுவர்கள் பலி: எதிரே வந்த காருடன் மோதி பரிதாபம்

பரமத்திவேலூர்: பரமத்திவேலூர் அருகே இரவு நேரத்தில் பெற்றோருக்கு தெரியாமல் கார் ஓட்டி பழகிய போது, மற்றொரு காருடன் நேருக்குநேர் மோதியதில் 2 சிறுவர்கள் பலியாகினர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்த கபிலர்மலையை சேர்ந்தவர் ரமேஷ். விவசாயி. இவரது மகன் சுதர்சன்(14), அதே பகுதியை சேர்ந்த விவசாயி ராமசாமி மகன் லோகேஷ் (17). சுதர்சன் 7ம் வகுப்பும், லோகேஷ் 9ம் வகுப்பும் படித்து வந்தனர்.

நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் ராமசாமிக்கு சொந்தமான காரை பெற்றோருக்கு தெரியாமல் எடுத்துக்கொண்டு லோகேஷ், சுதர்சன் ஆகியோர் வெளியே சென்றுள்ளனர். காரை சுதர்சன் ஓட்டியுள்ளான். பரமத்தி -கபிலர்மலை சாலையில் கார் ஓட்டிச் சென்றபோது, எதிரே வந்த சொகுசு கார் மீது நேருக்குநேர் மோதியது. இதில், சிறுவர்கள் ஓட்டிச்சென்ற கார் அப்பளம் போல் நொறுங்கியது. இருவரும் இடிபாடுகளுக்குள் சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்தனர். இதுகுறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post பெற்றோருக்கு தெரியாமல் இரவில் கார் ஓட்டி பழகிய 2 சிறுவர்கள் பலி: எதிரே வந்த காருடன் மோதி பரிதாபம் appeared first on Dinakaran.

Tags : Paramathivelur ,Ramesh ,Kapilarmala ,Namakkal district ,Sudharsan ,Dinakaran ,
× RELATED நாமக்கல் மாவட்டம் அருகே 14 வயது சிறுவன்...