×

இந்திய பல்கலைக்கழகங்களில் 2 முறை மாணவர் சேர்க்கை 2 முறை கேம்பஸ் இன்டர்வியூ: ஜூலையில் தவற விட்டவர்கள் ஜனவரியில் சேர்ந்து படிக்கலாம்

புதுடெல்லி: வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் பாணியில் இந்தியாவிலும் அனைத்து பல்கலைக்கழங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் ஆண்டுக்கு இருமுறை மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் அளித்த பேட்டி: இந்திய பல்கலைக்கழகங்களில் 2024-25 கல்வியாண்டில் இருந்து ஜூலை-ஆகஸ்ட் மற்றும் ஜனவரி-பிப்ரவரி ஆகிய இரு மாணவர் சேர்க்கை முறை இருக்கும். ஆண்டுக்கு 2 முறை மாணவர் சேர்க்கை வழங்கினால், தேர்வு முடிவுகள் அறிவிப்பதில் தாமதம், உடல் நலப் பிரச்னைகள் அல்லது தனிப்பட்ட காரணங்களுக்காக ஜூலை-ஆகஸ்ட் மாத மாணவர் சேர்க்கையில் பல்கலைக்கழகத்தில் சேரத் தவறிய மாணவர்களுக்கு உதவும். இதனால் ஓராண்டு காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது.

இது மாணவர்களுக்கு உத்வேகத்தை அளிப்பதோடு, தொழில் நிறுவனங்களும் தங்களின் கேம்பஸ் இன்டர்வியூவை ஆண்டுக்கு 2 முறை நடத்தலாம். பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும். ஏற்கனவே வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் ஆண்டுக்கு இருமுறை மாணவர் சேர்க்கையை பின்பற்றி வருகின்றன. இந்திய உயர்கல்வி நிறுவனங்களும் இம்முறையை கொண்டு வருதன் மூலம், மாணவர்கள் பரிமாற்றத்தையும் சர்வதேச ஒத்துழைப்பையும் மேம்படுத்த முடியும். இதன் மூலம் நமது உலகளாவிய போட்டித்தன்மை மேம்படும். உலகளாவிய கல்வித் தரத்துடன் நாமும் இணைய முடியும். இரு முறை மாணவர் சேர்க்கை நடத்துவது பல்கலைக்கழகங்களுக்கும் உயர்கல்வி நிறுவனங்களுக்கும் கட்டாயமில்லை. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

The post இந்திய பல்கலைக்கழகங்களில் 2 முறை மாணவர் சேர்க்கை 2 முறை கேம்பஸ் இன்டர்வியூ: ஜூலையில் தவற விட்டவர்கள் ஜனவரியில் சேர்ந்து படிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : NEW DELHI ,India ,UGC ,Jagadish Kumar ,
× RELATED நீட் முறைகேடு போராட்டம் வலுக்கிறது...