×

காட்டு யானைகள் தாக்கியதில் கார் கவிழ்ந்து எஸ்ஐ காயம்

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில் ஊட்டியில் இருந்து பிங்கர் போஸ்ட் கருப்பன் ஓலை பகுதியைச் சேர்ந்த தமிழ்நாடு சிறப்பு காவல் படை எஸ்ஐ மனோகரன் (52) தற்செயல் விடுப்பு எடுத்து மகன் அன்பரசனுடன் (24) காரில் கோவை சென்று கொண்டிருந்தார். கோத்தகிரி வியூ பாயிண்ட் அருகே சென்றபோது சாலையின் குறுக்கே இரு யானைகள் நிற்பதை பார்த்து காரை நிறுத்தினார். அப்போது எதிரில் வந்த டூவீலரின் ஹாரன் சத்தத்தால் யானைகள் மிரண்டு ஓடிவந்து தந்தத்தால் குத்தி காரை கவிழ்த்தன. இதில் கார் சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக மனோகரன் லேசான காயத்துடனும், அன்பரசன் காயமின்றியும் தப்பினர்.

The post காட்டு யானைகள் தாக்கியதில் கார் கவிழ்ந்து எஸ்ஐ காயம் appeared first on Dinakaran.

Tags : SI ,Mettupalayam ,Tamil Nadu Special Police Force ,SI Manokaran ,Pinker Post Karuppan ,Olai ,Mettupalayam-Kothagiri Road, Coimbatore ,Coimbatore ,Anbarasan ,Dinakaran ,
× RELATED மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில்...