×

இனிமேல் வாழ்க்கையில் விமான நிலையங்களில் செய்தியாளர் சந்திப்பு கொடுக்க மாட்டேன்: அண்ணாமலை!

கோவை: இனி விமான நிலையத்தில் பிரஸ் மீட் கிடையாது என கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி அளித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது; பாஜக கட்சி அலுவலகத்தில் மட்டும்தான் செய்தியாளர் சந்திப்பு நடைபெறும். விமானத்தில் இருந்து இறங்குவற்குள் சில விஷயங்கள் நடந்தது அது நமக்கு தெரியாமல் போகலாம்.

அனைத்து செய்தியாளர் சந்திப்பும் இனி கட்சி அலுவலகத்தில் மட்டும்தான் நடக்கும். பாத்ரூம் போகும்போது , திரும்பி வரும்போதெல்லாம் யாரும் பிரஸ்மீட் கொடுக்க மாட்டாங்க! குறிப்பாக இனிமேல் வாழ்க்கையில் விமான நிலையங்களில் செய்தியாளர் சந்திப்பு கொடுக்க மாட்டேன். பா.ஜ.கட்சி அலுவலகத்தில் மட்டும் சந்திப்பு இருக்கும். இதை முறைபடுத்த போகின்றோம். விமானத்தில் வரும்போது 3 மணிநேரம் ஆகிறது. அந்த நேரத்தில் என்ன நடக்கிறது என தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

 

The post இனிமேல் வாழ்க்கையில் விமான நிலையங்களில் செய்தியாளர் சந்திப்பு கொடுக்க மாட்டேன்: அண்ணாமலை! appeared first on Dinakaran.

Tags : Annamalai ,Coimbatore ,BJP ,president ,state president ,Dinakaran ,
× RELATED ‘பாத்ரூமிற்கு போகும்போதும்,...