×

சென்னை கொருக்குப்பேட்டை காவல் ஆய்வாளர் யுவராஜை பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையர் உத்தரவு

சென்னை: சென்னை கொருக்குப்பேட்டை காவல் ஆய்வாளர் யுவராஜை பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். தினேஷ் என்பவரது கொலை வழக்கில் அலட்சியமாக செயல்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

H-4 கொருக்குப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 2 சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் தலைமையிலான இரு தரப்பினருக்கிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உள்ளதாக முன்கூட்டியே அறிவுறுத்தப்பட்டிருந்த போதிலும், H-4 கொருக்குப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் R.யுவராஜ் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருந்த நிலையில், நேற்று (10.06.2024) மேற்படி சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் ஒரு தரப்பைச் சேர்ந்த தினேஷ் என்பவரை மற்றொரு தரப்பினர் கத்தியால் தாக்கி கொலை செய்துள்ளனர்.

மெத்தனமாக செயல்பட்டு, மேற்படி நிகழ்வினை தடுக்க தவறிய காரணத்திற்காக, R.யுவராஜ், காவல் ஆய்வாளர், H-4 கொருக்குப்பேட்டை காவல் நிலையம் அவர்கள், இன்று (11.06.2024) “தற்காலிக பணியிடை நீக்கம்” (Suspension) செய்யப்பட்டுள்ளார்.

The post சென்னை கொருக்குப்பேட்டை காவல் ஆய்வாளர் யுவராஜை பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Yuvaraj ,Chennai Korukupettai ,Chennai ,Chennai Korukupet ,Dinesh ,H- ,Korukupet Police Station Boundary Area 2 ,Korukupettai ,Dinakaran ,
× RELATED கொருக்குப்பேட்டை காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்..!!