×

ஆதிச்சநல்லூரில் நிரந்தர அருங்காட்சியகம் அமைப்பது பற்றி அறிக்கை தாக்கல் செய்ய ஒன்றிய அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவு..!!

மதுரை: ஆதிச்சநல்லூரில் நிரந்தர அருங்காட்சியகம் அமைப்பது பற்றி அறிக்கை தாக்கல் செய்ய ஒன்றிய அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி தொடர்பாக நிரந்த அருங்காட்சியகம் அமைக்க உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டது. தூத்துக்குடியைச் சேர்ந்த காமராஜ் என்பவர் பொதுநல வழக்கில் தொடர்ந்தார். அதில் ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி தொடர்பாக நிரந்தர அருங்காட்சியகம் அமைப்பது பற்றி ஒன்றிய அரசின் நிலைப்பாடு என்ன?. நிரந்தர அருங்காட்சியகம் அமைக்க பொதுமக்களிடம் இருந்து நிலம் கையகப்படுத்துவது ஏன்?.ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்க தமிழ்நாடு அரசு நிலம் வழங்கலாமே? என்றும் ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியது. அருங்காட்சியகம் அமைக்க நிலம் ஒதுக்கீடு செய்வது பற்றி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

The post ஆதிச்சநல்லூரில் நிரந்தர அருங்காட்சியகம் அமைப்பது பற்றி அறிக்கை தாக்கல் செய்ய ஒன்றிய அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : High Court Branch ,Union Govt ,Adichanallur ,Madurai ,High Court ,Union government ,Thoothukudi ,Kamaraj ,Dinakaran ,
× RELATED தேர்தலின் தூய்மை, புனிதம்...