×

மெலட்டூர், சுற்று வட்டார பகுதியில் பருத்தி பஞ்சுகள் மழையில் நனைந்து வீணானது

*விவசாயிகள் கவலை

தஞ்சாவூர் : தொடர் மழையால் அறுவடை பருவத்தில் இருந்த பருத்தி பஞ்சுகள் மழையில் நனைந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் மெலட்டூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கோடை மழை பெய்து வருகிறது. இந்த பகுதிகளில் விவசாயிகள் கோடை பருவத்தில் பருத்தி சாகுபடி செய்து இருந்தனர். பருத்தி பயிர்கள் தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. இந்த நேரத்தில் தொடர்ந்து மழை பெய்வதால் பருத்தி செடிகளில் வெடித்துள்ள பஞ்சுகள் மழையில் நனைந்து வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் அறுவடை காலமான தற்போது பருத்தி செடியில் உள்ள காய்கள் முற்றிய நிலையில் உள்ளது. பருத்தி காய்கள் வெடித்து தினசரி பஞ்சுகள் எடுக்ககூடிய நிலையில் மழையில் நனைந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர். மெலட்டூர் அருகே உள்ள தேவராயன்பேட்டை, பண்டாரவாடை, புலிமங்களம், வளத்தாமங்களம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கோடை பருவத்தில் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்துள்ளனர்.

பல பகுதிகளில் கோடையில் சாகுபடி செய்துள்ள பருத்தி செடிகளில் உள்ள பஞ்சுகள் மழையில் நனைந்து வீணாகி வருவது பருத்தி சாகுபடி விவசாயிகளை பெரிய அளவில் பாதிப்படைய செய்துள்ளது. பருத்தி செடியில் காய்கள் வெடித்து பஞ்சு எடுக்ககூடிய நிலையில் வெடித்த பஞ்சுகள், காய்கள் தொடர் மழையில் நனைந்து வீணாகி வருவது விவசாயிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து மழை பொய்தால் கோடை சாகுபடி பயிர்கள் முற்றிலும் வீணாகி பெரிய அளவில் நஷ்டத்தை ஏற்படுத்தும் என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

The post மெலட்டூர், சுற்று வட்டார பகுதியில் பருத்தி பஞ்சுகள் மழையில் நனைந்து வீணானது appeared first on Dinakaran.

Tags : Melatur ,Thanjavur ,Thanjavur district ,Dinakaran ,
× RELATED வெளிநாட்டுக்கு ஆட்கள் அனுப்புவதாக...