×

ஆதிச்சநல்லூரில் நிரந்தர அருங்காட்சியகம் அமைப்பது பற்றி அறிக்கை தாக்கல் செய்ய ஒன்றிய அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

மதுரை: ஆதிச்சநல்லூரில் நிரந்தர அருங்காட்சியகம் அமைப்பது பற்றி அறிக்கை தாக்கல் செய்ய ஒன்றிய அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி தொடர்பாக நிரந்த அருங்காட்சியகம் அமைக்க உத்தரவிடக் கோரி வழக்கில் உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியை சேர்ந்த காமராஜ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் பகுதியில் சுமார் 125 ஏக்கர் பரப்பளவில் ஒன்றிய அரசின் சார்பாக அகழ்வாராய்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அகழ்வாராய்ச்சியின் பொது தமிழர்களின் பாரம்பரிய பண்டைய கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் விதமாக சுமார் கி.மு. 1052 ஆண்டு மற்றும் 665 ஆண்டுகளுக்கு முன்பாக உள்ள பல்வேறு பொருட்கள் அங்கு கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த பொருட்களை ஒன்றிய அரசு அப்பகுதியில் தற்காலிக அருங்காட்சியகம் அமைத்து மக்களின் பார்வையக்கக வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த கனமழையால் அருங்காட்சியகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதுமட்டுமல்லாமல் 5,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த தொன்மையான அருங்காட்சியகத்தில் கிடைக்கக்கூடிய பண்டைய பொருட்களை பாதுகாக்கும் விதமாக கீழடி போன்று அப்பகுதியிலேயே ஒரு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது ஒன்றிய அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அப்பகுதியில் அருங்காட்சியகம் அமைக்க போதிய இடம் இல்லை எனவும் பொதுமக்களிடம் பெறப்பட்ட இடங்கள் சம்பந்தமாக வழக்குகள் நிலுவையில் உள்ளதால் காலதாமதமாகிறது எனவும் தெரிவித்தார்.

அப்போது கூறிய நீதிபதிகள், அப்பகுதியில் அரசுக்கு சொந்தமான ஏராளமான நிலங்கள் உள்ளது. அதனை கண்டறிந்து அரசுத்தரப்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். ஒன்றிய அரசு அப்பகுதியில் அருங்காட்சியகம் அமைக்க எடுக்கபட்ட நடவடிக்கைகள், அகழ்வாராய்ச்சியில் கிடைக்கக்கூடிய பொருட்களை அங்கேயே அருங்காட்சியகம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய ஒன்றிய அரசிற்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

The post ஆதிச்சநல்லூரில் நிரந்தர அருங்காட்சியகம் அமைப்பது பற்றி அறிக்கை தாக்கல் செய்ய ஒன்றிய அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : High Court ,Union Government ,Adichanallur ,Madurai ,Court ,Thoothukudi Adichanallur ,Kamaraj ,Thoothukudi ,Dinakaran ,
× RELATED FMGE தேர்வுக்கு தடை கோரி வழக்கு: ஒன்றிய அரசு பதில்தர ஐகோர்ட் கிளை உத்தரவு