×

நாமக்கல் மாவட்டம் அருகே 14 வயது சிறுவன் ஓட்டி வந்த காரால் விபத்து: 2 சிறுவர்கள் பலி

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்த கபிலர்மலை அருகே 14 வயது சிறுவன் ஓட்டி வந்த காரால் விபத்து ஏற்பட்டு 2 சிறுவர்கள் பலியாகினர். சிறுவன் ஓட்டிய கார் மற்றொரு காரின் மீது மோதியதில் காரை ஓட்டிவந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே பலி ஆனான்.

நாமக்கல் மாவட்டம் பெரியமருதூரை சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மகன் 17 வயதுடைய லோகேஷ் 9ம் வகுப்பை முடித்து வீட்டி இருந்து வந்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவருடைய மகன் 14 வயதுடைய சுதர்ஷன் 6ம் வகுப்பு முடித்து பள்ளி படிப்பை தொடராமல் வீட்டில் இருந்து வந்துள்ளார்.

லோகேஷ், சுதர்ஷனுக்கு கார் ஓட்ட கற்றுத்தருவதற்காக தனது அப்பாவின் காரை நேற்று இரவு 10 மணியளவில் சென்றுள்ளனர். அப்பொழுது கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த மற்றொரு காரின் மீது மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கிய சிறுவர்கள் இருவரும் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் அப்பகுதிக்கு வந்து உயிரிழந்த சிறுவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கார் ஓட்ட கற்றுக்கொள்ள முயன்றபோது விபத்து ஏற்பட்டு 2 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post நாமக்கல் மாவட்டம் அருகே 14 வயது சிறுவன் ஓட்டி வந்த காரால் விபத்து: 2 சிறுவர்கள் பலி appeared first on Dinakaran.

Tags : Namakkal district ,Namakkal ,Paramathivelur ,Kapilarmalai ,Dinakaran ,
× RELATED இலவச தையல் இயந்திரம் பெற பதிவு செய்ய அழைப்பு