×

“மணிப்பூர் இன்னும் எரிந்துகொண்டுதான் இருக்கிறது. அதை யார் கவனிக்கப் போகிறார்கள்?” : மோகன் பகவத் பேச்சு

மும்பை : “தேர்தலின்போது போட்டி தவிர்க்க முடியாதது, ஆனால் அது நேர்மையாகவும், கண்ணியமாகவும் இருக்க வேண்டும். உண்மையான சேவகர் கண்ணியத்தை கடைபிடிப்பார். ஆணவத்தை காட்டி, மற்றவர்களை காயப்படுத்த மாட்டார் என்று மகாராஷ்டிரா மாநில நாக்பூரில் RSS தலைவர் மோகன் பகவத் பேசியுள்ளார். மேலும் தேர்தல் வாய் சவடால்களை விட்டு விட்டு, நாடு எதிர்கொள்ளும் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது. மணிப்பூர் இன்னும் எரிந்துகொண்டுதான் இருக்கிறது. அதை யார் கவனிக்கப் போகிறார்கள்?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

The post “மணிப்பூர் இன்னும் எரிந்துகொண்டுதான் இருக்கிறது. அதை யார் கவனிக்கப் போகிறார்கள்?” : மோகன் பகவத் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Manipur ,Mohan ,Mumbai ,RSS ,Mohan Bhagwat ,Nagpur, Maharashtra ,Mohan Bhagavad ,
× RELATED மோகன் பகவத்தே சொல்லிட்டாரே இப்பவாவது...