×

புதுச்சேரியில் விஷவாயு தாக்கி 2 பெண்கள் பலி

புதுச்சேரி: புதுச்சேரியில் விஷவாயு தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண்கள் உயிரிழந்தனர். ஒருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரெட்டியார்பாளையத்தில் மூதாட்டி செந்தாமரை(72) வீட்டில் உள்ள கழிவறைக்கு சென்றபோது மயங்கி விழுந்துள்ளார். மயங்கி விழுந்த செந்தாமரையை தூக்கச் சென்ற அவரது மகள் காமாட்சி(55)யும் விஷவாயு தாக்கி மயங்கி விழுந்துள்ளார். 3-வதாக சென்ற பாக்கியலட்சுமியும் மயங்கி விழுந்துள்ளார்; 3 பேரும் மீட்கப்பட்டு மருத்துவமனை அனுப்பிவைக்கப்பட்டனர். மருத்துவமனை செல்லும் வழியில் உடல்நிலை பாதிக்கப்பட்ட மூதாட்டி செந்தாமரை, காமாட்சி உயிரிழந்தனர். விஷவாயு தாக்கிய பாக்கியலட்சுமிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

The post புதுச்சேரியில் விஷவாயு தாக்கி 2 பெண்கள் பலி appeared first on Dinakaran.

Tags : Puducherry gas attack ,Puducherry ,Redyarpalayam, ,Senthamarai ,Puducherry gas ,Dinakaran ,
× RELATED புதுச்சேரியில் விஷவாயு தாக்குதலால் 3...