×

கண்டியாநத்தம் ஊராட்சியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கிரீடம் அணிவித்து வரவேற்பு

 

பொன்னமராவதி,ஜூன் 11: பொன்னமராவதி பகுதியில் புதிய கல்வியாண்டில் அடியெடுத்து வைக்கும் அரசு பள்ளியின் முதல் வகுப்பு மாணவர்களுக்கு கிரீடம் அணிவித்தும், விலையில்லா பாடநூல்கள் வழங்கியும் ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் வரவேற்றனர்.

பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளிதொடக்க நாளில் பள்ளியில் சேர்ந்த முதல் வகுப்பு மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் கிரீடம் அணிவித்து வரவேற்றனர்.

மேலும் மாணவர்களுக்கு இனிப்பு மற்றும் விலையில்லா பாடநூல்கள் வழங்கினர். இதில் ஊராட்சி மன்றத்தலைவர் செல்வி தலைமையாசிரியர் சுபத்ரா பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சங்கர், பள்ளிமேலாண்மை குழு தலைவர் யசோதா, புரவலர் வத்துமலைராச மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

The post கண்டியாநத்தம் ஊராட்சியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கிரீடம் அணிவித்து வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Kandiyanantham panchayat ,Ponnamaravati ,Kandiyanantham Panchayat Union Middle School ,
× RELATED பொன்னமராவதி அருகே அரசு...