×

காவலர்களின் குழந்தைகளுக்கு காவலர் சேமநல உதவித்தொகை பெரம்பலூர் எஸ்பி வழங்கினார்

 

பெரம்பலூர், ஜூன் 11: பெரம்பலூர் மாவட்டத்தில் பணிபுரியும் காவல்துறையினரின் குழந்தைகளுக்கு காவலர் சேமநல உதவி தொகையை எஸ்பி ஷ்யாம்ளா தேவி வழங்கினார். பெரம்பலூர் மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் காவல் துறையினரின் குடும்பத் தைச் சேர்ந்த குழந்தைகள் 12 -ம் வகுப்பில் நல்ல மதிப் பெண்கள் எடுத்ததற்கும், அவர்கள் கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கும் உத வியாக காவலர் சேம நல நிதி உதவித்தொகையை நேற்று மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளா தேவி மாணவர்களிடம் வழங்கி னார். இதன்படி மாண வர்களின் மேற்படிப்பிற்கு உதவி தொகை வழங்குவ தன் மூலம் மாணவர்கள் உத்வேகத்துடன் படிக்கவும் அவர்களின் கல்வியை மேம்படுத்தவும் உதவும் வகையில் காவலர் சேமநல நிதி உதவித் தொகையை வழங்கினார்.

The post காவலர்களின் குழந்தைகளுக்கு காவலர் சேமநல உதவித்தொகை பெரம்பலூர் எஸ்பி வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Perambalur ,SP ,Shyamla Devi ,Perambalur district ,
× RELATED பெரம்பலூரில் எஸ்பி ஷ்யாம்ளா...