×

சாலைகளில் உலா வரும் கால்நடைகளால் விபத்து அபாயம்

 

கோத்தகிரி, ஜூன் 11: கோத்தகிரி நகர் பகுதி மற்றும் குன்னூர், உதகை நெடுஞ்சாலை, பேருந்து நிலையம், மார்க்கெட், வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் செல்லும் சாலை, காந்தி மைதானம் மற்றும் பேருந்துகள் செல்லும் பிரதான சாலைகளில் சமீப காலமாக வளர்ப்பு கால்நடைகள் சாலை மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் உலா வருகிறது.

இதனால் அவ்வப்போது போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இதனால், சில சமயங்களில் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்படுகிறது. எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலை மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் உலா வரும் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

 

The post சாலைகளில் உலா வரும் கால்நடைகளால் விபத்து அபாயம் appeared first on Dinakaran.

Tags : Kotagiri ,Kotagiri Nagar ,Coonoor ,Utagai Highway ,Bus Stand ,Revenue District Office ,Gandhi Maidan ,Dinakaran ,
× RELATED கோத்தகிரியில் தென்மேற்கு பருவமழை தீவிரம்: தேயிலை மகசூல் அதிகரிப்பு